
தம்மாம் காயல் நற்பணிமன்றம் சார்பாக இன்று நமதூர் ஜலாலியாவில் நடைபெற்ற மாணவர்களுக்கான சிறகுகளை விறியுங்கள் நிகழ்ச்சியில் நமதூர் பள்ளிகளின் பெறும்பாலான மாணவர்கள் கலந்துகொண்டனர். துவக்கமாக திருமறை வசனத்தை ஹாஃபிழ்.A.R. அப்துல் காதர் வாஃபிக் ஓதினார். தொடர்ச்சியாக வரவேற்புரையை காயல் நற்பணிமன்ற உறுப்பினர். J. செய்யது ஹசன் நிகழ்த்தினார் அதனை தொடர்ந்து நிகழ்ச்சியின் அறிமுகவுரையை தம்மாம் காயல் நற்பணிமன்றத்தின் முன்னால் உறுப்பினர். A.R. தாஹா அவர்கள் வழங்கினார்கள் நிகழ்ச்சியின் சிறப்புரையாளர் முனைவர். S.ஆப்தீன் அவர்களைப்பற்றிய அறிமுகவுரையை ஜனாப்.S.K. சாலிஹ் அவர்கள் நிகழ்த்தினார்கள்.


அதனைத் தொடர்ந்து முனைவர்.S.ஆப்தீன் அவர்கள் வெண்பட விளக்கத்துடன் மாணவர்களுடன் கலந்துரையாடல் முறையில் ஊக்குவித்தல் படிக்கும் முறைகள் Available Courses என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். நிகழ்ச்சின் தொடர்ச்சியாக நிகழ்ச்சிக்கு முன்பே கேட்கப்பட்ட மூண்று கேல்விகளுக்கு சரியான முறையில் பதில் எழுதிய மாணவர்களில் 5 பேரும் மாணவிகளில் 5 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. சிறப்புரையாளருக்கு தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் சார்பாக நினைவுப்பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.


நன்றியுரையை தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் உறுப்பினர் ஜனாப். S.M.புஹாரி அவர்கள் வழங்கினார்கள். லுஹர் தொழுகை இடைவேலையின் போது மாணவ மாணவிகளுக்கு தேனீர் மற்றும் சமூசா வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளை ஜனாப்.S.K.சாலிஹ் தொகுத்து வழங்கினார்கள்.

Dammam Kayal Narpani Mantram Siragukalai Viriyingal Educational Program
தகவல்.
J.செய்யது ஹசன்
தம்மாம் காயல் நற்பணி மன்றம்.
புகைப்படங்கள்.
K.S.மூஸா
ஹாஜி அப்பா தைக்கா தெரு.
0 comments: